தேனி : தலைமை ஆசிரியரை அடித்து மாணவர்களை அறையில் வைத்து பூட்டிய தாளாளர்.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தலைமை ஆசிரியரை அடித்து மாணவர்களை அறையில் வைத்து பூட்டிய தாளாளர்.! வைரலாகும் வீடியோ.!

தேனி மாவட்டத்தில் உள்ள திட்ட சாலையில் மஹாராஜா தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் முப்பது மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சென்றாயப்பெருமாள் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அதேபோல், பள்ளியின் தாளாளராக அன்பழகன் என்பவர் இருந்து வருகிறார்.

இதற்கிடையே அன்பழகன், அல்லி நகரத்தில் உள்ள முத்தையா அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பள்ளியின் தாளாளராக இருப்பவர் மற்றொரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றுவது குறித்து கல்வி துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. 

ஆனால் அதிகாரிகள் இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்தப் புகாருக்கு காரணம் சென்றாயப் பெருமாள்தான் என்று நினைத்த அன்பழகன் அவருக்கும், இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் சுமதி என்பவருக்கும் முறையாக சம்பளம் வழங்காமல் இருந்து வந்துள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றம் சென்ற ஆசிரியர்கள் இருவரும் தற்போது அரசிடம் இருந்து சம்பளம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கு வந்த தாளாளர் அன்பழகன், தலைமை ஆசிரியரை மாணவர்கள் முன்னிலையில் அடித்து கீழே தள்ளியுள்ளார். இதனை ஆசிரியை சுமதி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

இதைத்தொடர்ந்து இருவரையும் பள்ளியை விட்டு வெளியேற்றிய தாளாளர் அன்பழகன், மாணவர்களை பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் பள்ளிக்கு வந்து மாணவர்களை மீட்டு அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school Secretary attck head master and locked students in school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->