வகுப்பறையில் மயங்கி விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியை அடுத்த பெல்லியப்பா நகரைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். 

இவருக்கு காவியா மற்றும் ஈஷா அத்விதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் ஈஷா அத்விதா வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஈஷா அத்விதா, வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் அமர்ந்து நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அத்விதா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் சம்பவம் குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அவர்கள் மாணவியை மீட்டு மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மாணவி இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், உயிரிழந்த மாணவிக்கு ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்ததும், அதனால் இறந்ததும் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died classroom in ranipet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->