நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் பிணமாக மீட்பு.!! - Seithipunal
Seithipunal


நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் பிணமாக மீட்பு.!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள, புங்கமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேல்சாமி-செல்வி தம்பதியினர். இவர்களது மகன் ரூபன். இவர் சூரப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார்.

 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் இவர் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் தன் சொந்த கிராமத்திற்கு வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் ரூபன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள கால்வாயிற்கு குளிக்கச் சென்றுள்ளார்.

அங்கு ஆழமான பகுதிக்குச் சென்ற ரூபன், எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த சக நண்பர்கள் ரூபனைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. உடனே அவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். 

அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு மாணவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாயில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died fell drowned canal in viruthunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->