கல்லூரி மாணவி பாலியல் வழக்கு - விடுவிக்ககோரி ஞானசேகரன் மனுதாக்கல்.!
acquest ganasekaran petion of release anna university case
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கடந்தாண்டு டிசம்பர் 25-ந்தேதி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து ஞானசேகரன் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணைக்காக ஞானசேகரன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஞானசேகரன் மனு மீது 7-ந்தேதி அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
English Summary
acquest ganasekaran petion of release anna university case