சில டிப்ஸ்!!!மலக்குடல், பெருங்குடல் கேன்சரை தவிர்க்க... பாக்கலாமா?
To avoid rectal and colon cancer
இந்த உலகில் நவீன வாழ்க்கை முறையால் மனிதர்கள் உடலில் பெருங்குடல், மலக்குடல் கேன்சர் உள்பட எல்லா வகை புற்று நோய்களும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த செல்கள் கேன்சராக மாறும் முன், பல ஆண்டுகளாக இது பெருங்குடல் உள்பக்கம் சிறு மரு வடிவிலான (பாலிப்) போல் தோன்றி மெல்ல மெல்ல வளரும்.
இந்த கேன்சர் துவங்கும் போது எந்தவித உபாதையும் உடலுக்கு தராது. இந்த நிலையிலேயே. 'கோலனாஸ்கோப்பி' பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும்.
இதில் உடல் எடையை சரியான அளவில் பராமரித்தல், சீரான உடற்பயிற்சி, புகையிலை போன்ற தவறான பழக்கம் தவிர்ப்பு, அதிக மது அருந்தாமல் இருத்தல் போன்றதை கடைப்பிடித்தல் மிகவும் அவசியம்.
மேலும் கேன்சர் துவக்க காலத்தில், மாமிச உணவுகளை உட்கொள்வதை குறைத்தல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்தல், அதிக பழங்கள் உட்கொள்ளுதல் , அதிக காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் போன்றது நல்ல பலன்களை தரும்.
அதுமட்டுமின்றி கோலான் பாலிப் வளர்ந்து கேன்சராகி நம்மை வீழ்த்தும் முன், வாழ்வியல் மாற்றங்கள், சரியான நேரத்தில் பரிசோதனைகள் செய்தால் இந் நோயை எளிதாக வெல்லலாம்.
English Summary
To avoid rectal and colon cancer