தஞ்சாவூர் - விடுதி காப்பாளர் தாக்கி பள்ளி மாணவனின் கை முறிவு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் - விடுதி காப்பாளர் தாக்கி பள்ளி மாணவனின் கை முறிவு.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான‌ விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தங்கி ஈஸ்வரன் என்ற மாணவன் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் காப்பாளராக பணிபுரியும் தண்டாயுதபாணி என்பவர் இரும்பு கம்பியால் இடது கையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவன் தன்னை விடுதி காவலர் தாக்கியதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை வட்ட கல்வி அதிகாரி கோவிந்தராஜ் விளக்கம் அளித்துள்ளார். 

அதாவது, "கடந்த திங்கட்கிழமை காலை பாதிக்கப்பட்ட மாணவன் குண்டு எறிதல் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவரைக் காவலாளி விளையாடக் கூடாது என்று கண்டித்து விரட்டியுள்ளார். இதனால், மாணவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளார். அப்படி ஓடும்போது வளாகத்தில் உள்ள கதவில் மாணவனின் கை அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.  

உடனடியாக அவனது பெற்றோரை வரவழைத்து,  அவர்களது முன்னிலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களுடன் மாணவன் அனுப்பி வைக்கப்பட்டார்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student hand broke for hostel security attack in thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->