ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - யாருக்கு? எப்போது?
school teachers consultation date announce
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 31-ம் தேதி நடைபெறும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நடப்பு கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்காக திட்டமிடப்பட்டு அதற்காக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன் படி, தலைமையாசிரியர், முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழாசிரியர், காப்பாளர் உள்ளிட்டோர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவின் காரணமாக இந்த பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வருகிற 31-ம் தேதி அன்று பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகங்களில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என்றும், மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் குளறுபடிகள் ஏதேனும் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதிதிராவிட நலத்துறை எச்சரித்துள்ளது.
English Summary
school teachers consultation date announce