பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! அதிர்ச்சியடைந்த பெற்றோர்! போலீசார் விசாரணை!
schoolgirl sexually harassed Police investigation
ராணிப்பேட்டை, நெமிலியை அடுத்துள்ள திருமால்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று மாலை வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அதே பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் மாணவியை கடத்தி காரில் ஏற்றிச் சென்று இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின்னர் மாணவியை அடுத்த நாள் மதியம் பள்ளூரில் இறக்கிவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு தெரிவித்து அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற மாணவி அவரது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெமிலி காவல் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
schoolgirl sexually harassed Police investigation