#காஞ்சிபுரம் || தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவிகள்.. பெரும் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மொளச்சூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்ய முயன்றதை அறிந்த மாணவியின் தோழியும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரியாக படிக்கவில்லை என பெற்றோர்கள் கண்டித்ததால் உணவில் எலி மருந்து கலந்து மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதை அறிந்த தோழியும் தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் இருவரும் மீட்கப்பட்டு தற்போது ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Schoolgirls tried to commit suicidein kanchipuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->