ரகசிய கேமரா: ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறைக்கு சீல்..!
seal in dress change room at rameshwaram
பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தனர்.
அவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர், கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அறைக்குள் ரகசிய கேமரா இருந்ததை, இளம்பெண் ஒருவர் கண்டுபிடித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் படி போலீசார் விரைந்து வந்து அங்கு வேலை செய்த ஊழியர்களைக் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அங்குள்ள உடை மாற்றும் அறையில் பல மாதங்களாக ரகசிய கேமரா வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, இவர்கள் இருவரும் மொபைல் போனில் பார்த்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் இருவரும் வீடியோக்களை வைத்து யாரையும் மிரட்டினார்களா அல்லது வலைத்தளங்களிலோ, வேறு யாருக்கும் பகிர்ந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீசார், ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையை பூட்டி சீல் வைத்தனர்.
English Summary
seal in dress change room at rameshwaram