தலைவிரித்தாடும் போதைப்பொருள் விற்பனை - 17,550 கடைகளுக்கு 'சீல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்று விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உறுதிமொழி ஏற்றார். அதன் பின், அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:-

"தமிழகத்தில் இளைய சமுதாயத்தினரை போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சியில், முதலமைச்சர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதேபோல், காவல் துறை மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து, போதைபொருட்கள் விற்பனைக்கு எதிராக, உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 2021 முதல் இதுவரை 8.66 லட்சம் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32,404 கடைகளில் பான்பராக், குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அந்த கடைகளில், 21 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.86 லட்சம் கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், 17,550 கடைகள் மூடி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில், அபராத தொகையாக, 33.28 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seal to 17550 shops in tamilnadu for drugs sales


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->