திருச்சி : முப்பது வருடமாக செயல்பட்ட ஐஸ்கிரீம் கடைக்கு சீல் - அதிர்ச்சியில் ஆவடிக்கையாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி : முப்பது வருடமாக செயல்பட்ட ஐஸ்கிரீம் கடைக்கு சீல் - அதிர்ச்சியில் ஆவடிக்கையாளர்கள்.!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய தபால் நிலையம் எதிரில் பிரபல ஐஸ்கிரீம் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனை செய்யப்படும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட உணவுகள் தரம் இல்லாமல் உள்ளதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.

அந்த புகாரின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அந்தக் கடையில், தரமில்லாத ஐஸ் கிரீம்கள் இருந்துள்ளது. மேலும் ஐஸ் கிரீம் தயாரிக்கும் இடங்களும் சுகாதாரமற்ற முறையில் இருந்துள்ளது. 

இதைப்பார்த்த அதிகாரிகள் உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்தனர். சுமார் 30 வருடமாக செயல்பட்டுவந்த ஐஸ் கிரீம் கடைக்கு சீல் வைத்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் பெரிய கடை வீதியில் அமைந்துள்ள துணிக்கடை மாடியில் செயல்படும் உணவகம் ஒன்றிலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து அந்த கடையிலும் அதிகாரிகள் சோதனை செய்து சீல் வாய்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seal to ice cream shop in trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->