சீமான் நேரில் வந்து ஆஜராக முடியாது - சீமான் தரப்பு திட்டவட்டம்!
Seaman cannot appear in person
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இது தொடர்பாக நேரில் ஆஜராகும் படி சீமானுக்கு ஏற்கனவே வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால் சீமான் நேரில் வந்து ஆஜராகவில்லை. இதனால் இன்று காலை வளசரவாக்கம் போலீசார் பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்கு நேரடியாக சென்று சம்மன் வழங்க முடிவு செய்தனர்.
சீமான் நாளை நேரில் ஆஜராகுவதற்கான சம்மனை வழங்குவதற்காக சென்றபோது சீமான் தரப்பு சம்மனை மறுத்துவிட்டது.
கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் கலந்து கொள்ள இருப்பதால் நேரில் ஆஜராக முடியாது, காவல் நிலையத்திற்கு வந்து சமனை பெற்றுக் கொண்டு வேறொரு தேதியில் சீமான் நேரில் ஆஜராகுவார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயத்தில் விஜயலட்சுமி மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளதாகவும் 2011ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு மீண்டும் தொடங்கி இருப்பதால் வழக்கை ரத்து செய்ய கோரியும் உயர் நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாகவும் சீமான் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Seaman cannot appear in person