எந்த சின்னம் கொடுத்தாலும்... வெற்றிதான் - சீமான் பரபரப்பு பேட்டி!
Seaman speech viral
வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கட்சியின் தலைவர் சீமான் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்ப விவசாய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது சர்ச்சையானதோ அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானதோ கிடையாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு விசாரணை கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீட்டுக்கு வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருப்பதாவது,
நாம் தமிழர் கட்சிக்கு எந்த ஒரு சின்னம் கொடுத்தாலும் பிரச்சனை இல்லை, வெற்றி பெறுவோம். எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள். மாற்றாக விவசாயத்தை முன்வைத்து ஒரு சின்னம் கேட்டால் அதையும் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.