நானே உடைப்பேன்... அறிவாலயம் முன்னாடி பேனா சிலைய வை... கருத்து கேட்பு கூட்டத்தில் சீரிய சீமான்..!! - Seithipunal
Seithipunal


மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக வங்கக்கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்டு கூட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. 

இந்த கருத்து கேட்டுக் கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். 

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார். பேனா சின்னம் அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்ட மேடையில் பேசிய அவர் "கடலில் பேனா சிலையை வைக்க வேண்டும் என்றால் கல்லை கொட்ட வேண்டும்,  மண்ணை கொட்ட வேண்டும்.

அதனால் ஏற்படும் அழுத்தத்தினால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும்" என பேசிக் கொண்டிருக்கும் பொழுதே திமுகவினர் சீமானை பார்த்து வெளியே போ என கூச்சல் எழுப்பினர்.

அதற்கு பதிலடி தந்த சீமான் "உனக்கு எத பத்தி அக்கறை இருந்திருக்கு. உங்கள கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு. நீ பேனாவை ஒரு நாள் நானே வந்து உடைக்கிறேன். பேனாவை கடலுக்குள்ள தான் வைக்கணுமா உங்களுக்கு. பள்ளி கூடத்த சீரமைக்க காசு இல்ல, பேனா வைக்க காசு எங்கிருந்து வந்தது. 

ஏன் அண்ணா அறிவாலயத்தை முன்னாடி வை, நினைவிடம் கட்டுனீங்களே அங்க வை, கடலுக்குள்ள தான் வைப்பராம். இதனால 13 மீனவர் கிராமங்கள் பாதிக்கப்படுகிறது" என கருத்து கேட்பு கூட்ட மேடை ஆவேசமாக பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman ask pen statue put in front of arivalayam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->