கொலை மிரட்டல்.. மொத்தமாக சிக்கிய சீமான், சாட்டை, இடும்பாவனம்! SP வருண்குமார் புகாரில் திடீர்திருப்பம்! - Seithipunal
Seithipunal


திருச்சி, புதுக்கோட்டை எஸ்பிகளுக்கு சமூக வலைத்தளத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுத்த, விருதுநகரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கண்ணன், திருப்பதி ஆகியோரை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்திருந்தனர். 

சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்களுக்கு தூண்டுதலாக இருந்ததாக நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் பதிவிட்ட 17 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எஸ்பி வருண்குமாருக்கு கொலை மிரட்ட விடுத்ததாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சீமான் உள்ளிட்ட 17 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்கும், பின்னணியும்:

திருச்சி மாவட்ட எஸ்பியாக இருக்கும் வருண்குமார், அவரின் மனைவி புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோருக்கு சமூக வலைத்தளம் மூலமாக கொலை மிரட்டல் விடுத்ததாக நேற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன், திருப்பதி கைது செய்யப்பட்டனர். 

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை முருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரின் தூண்டுதலின் பெயரிலேயே எஸ்பி வருண்குமார் மற்றும் அவரின் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு பதிவுகளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலரை தூண்டிவிட்டு கொலை மிரட்டல் பதிவு போடக் கூடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், சீமான், சாட்டை, இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் 41 பேருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களையும் விரைவில் போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman NTK Trichy Varunkumar SP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->