அச்சச்சோ!!!சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் உதவியாளருக்கு ஜாமின் கிடைத்து விட்டதாம்!!!
Seemans housekeeper and assistant have been granted Bail
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார், நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.இதில் சீமான் வீட்டு வாசலில் ஒட்டப்பட்ட சம்மனை சீமான் வீட்டில் உதவியாளராக பணிபுரியும் சுபாகர் கிழித்ததாக தெரியவந்தது.

இதற்காக போலீசாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுபாகரையும், அவரது வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜையும் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில், அரசியல் உள்நோக்கத்துடன் தங்களை போலீசார் கைது செய்திருப்பதாகவும், போலீசார் கூறிய குற்றச்சசாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும், துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதால் தங்களை ஆயுத தடுப்பு சட்ட பிரிவின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் மேற்கட்ட விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
English Summary
Seemans housekeeper and assistant have been granted Bail