சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன மூலம் பழுக்க வைத்த சுமார் 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனமூலம் பழுக்க வைத்த சுமார் 7 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் விற்பனை செய்யப்படும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது ரசாயனம் கலந்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆறு கடைகளில் இருந்து சுமார் 7 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் ஒரு டன் வாழைப்பழங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்த பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கிருமி நாசினி ஊற்றி அழித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seizure of chemically ripened mangoes in Koyambedu market


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->