கலர் பிரிண்டர் மூலம் கள்ள நோட்டுகள் தயாரிப்பு! புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 40). இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். 

இவரது கடைக்கு நேற்று வந்த நபர் ஒருவர் 200 ரூபாய் நோட்டுகள் மூன்று கொடுத்து இறைச்சி வாங்கி சென்றார். அந்த நோட்டுகளை வாங்கி பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டு அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கள்ளநோட்டு வைத்திருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டியைச் சேர்ந்த உபைஸ் அலி (வயது 24) என்பதும் இவர் ஒரு பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. 

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பேன்சி ஸ்டோரில் போலீசார் தலைமையிலான ஒரு குழு சோதனை நடத்தியதில் அங்கு கலர் பிரிண்டரை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர் கள்ள நோட்டுகள் அடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர், செல்போன், அங்கிருந்த கள்ள நோட்டுகள், காகித தாள்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கலர் பிரிண்டர் மூலம் கள்ள நோட்டு தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் போலீசார் கடை உரிமையாளர் கஜா மைதீன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆச்சப்படுத்தி சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

கள்ள நோட்டு கும்பலுடன் மேலும் யாராவது தொடர்பு கொண்டு உள்ளார்களா? இன்னும் எவ்வளவு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selam counterfeit notes taking color print


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->