மனைவியின் நடத்தையில் சந்தேகம்! ஆத்திரத்தில் அம்மிக்கல்லை எடுத்த கணவர் கைது! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கன்னங்குறிச்சி பதகுதியில் நடத்தையில் ந்தேகம் ஏற்பட்டதால் கணவர், தூங்கிக் கொண்டிருந்த மனைவியை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் அருகே கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 39). இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராதா (வயது 33). இவர் வீட்டு வேலை செய்து வந்தார். 

இவர்களுக்கு கனிஷ்கா (யாது 11) என்ற மகளும், கோகுல் (வயது7) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நாமகிரிபேட்டை அருகே உள்ள ஈச்சப்பாறையில் மாமனார் ரமனா குடும்பத்தினருடன் கடந்த 3 மாதங்களாக கோவிந்தன், அவரது மனைவி ராதா, குழந்தைளுடன் வசித்து வந்தார். 

மனைவி ராதாவின் நடத்தையில் கோவிந்தனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக வந்துள்ளது. 

குடிபோதையில் இருந்த கோவிந்தன், நேற்று இரவு 11 மணியளவில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ராதாவின் தலையில் சரமாரியாக அம்மிக்கல்லை போட்டு தாக்கினார். 

இதனை பார்த்த குழந்தைகள் சத்தம் போட்டு அழுத்துள்ளனர்.  அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராதாவை மீட்டு நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். 

ராதாவை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து, பின்னர் ராதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் போலீசார், நாமகிரிப்பேட்டை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். 

பின்னர் நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த வழக்கில் அவரது கணவர் கோவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கணவர், தூங்கிக் கொண்டிருந்த மனைவியை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Selam wife murder case husband arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->