''இபிஎஸ்-யை வாழ்த்துவது அவர்களுக்கு பெருமை'' - விஜய் குறித்து செல்லூர் ராஜு கருத்து.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிப்பது அவர்களுக்கும் பெருமை எங்களுக்கு பெருமை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி அவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போல் சம்பாதித்த பணத்தை ஏழை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து செய்கிறார். 

எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் வாழ்த்து சொன்னாலும் அது சொன்னவர்களுக்கும் பெருமை எங்களுக்கும் பெருமை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->