#BREAKING | பந்தாடப்படும் செந்தில்பாலாஜி! நீதிபதி அல்லி கொடுத்த அப்டேட்!
Senthil Balaji Bail Case 30082023
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
மேலும், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்க்கு அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்புதெரிவிக்கவே, ஜாமீன் வேண்டுமென்றால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடி செந்தில் பாலாஜி தரப்பு பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதி ரவி தனது உத்தரவில் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று, முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜாமின் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்ட நிலையில், நீதிபதி அல்லி, வழக்கை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
English Summary
Senthil Balaji Bail Case 30082023