செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதனால், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றம் வரை செந்தில் பாலாஜி தரப்பு சென்ற நிலையில், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

மேலும், வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதற்கிடையே, அவரது நீதிமன்ற காவலை 17வது முறையாக, ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறையினர் திருத்தம் செய்துள்ளதாகவும், தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எத்தகைய தீர்ப்பை அளிப்பார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthil balaji vail case today hearing


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->