செந்தில்பாலாஜி ஜாமீன் மனு! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஜாமீன் வேண்டுமென்றால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று, செந்திபாலாஜிக்கு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட வேண்டும் என்று, நீதிபதி எம் சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரணை செய்ய முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை செய்த நீதிபதி எம் சுந்தர், ஜாமின் மனு மீதான உத்தரவை யார் பிறப்பிப்பார் என்பது குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று, செந்தில்பாலாஜி தரப்பிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji Bail Case Chennai HC order 31082023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->