தீர்ப்பு ஒத்திவைப்பு! செந்தில்பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் தர சட்டத்தில் இடமில்லை, காவலில் எடுத்து விசாரிக்க ED மனு!
Senthilbalaji bail case ed case judgment postpone
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்த சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி அவர்கள், வரும் 28 ஆம் தேதிவரை அவருக்கு நீதிமன்ற காவல் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரிமாண்டை நிராகரிக்க வேண்டும் எனவும், ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக சார்பில் தனித்தனியே மனு தாக்கல் செய்யப்பட்டது.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை தொடங்கி நடந்து வரும் நிலையில், வழக்கு விசாரணையின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் தர சட்டத்தில் இடமில்லை என்று அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக தரப்பு வாதம் : அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே அமலாக்கத்துறை சோதனை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தும் கைது செய்தது ஏன்? கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்பவில்லை. கைதுக்கான காரணங்களை செந்தில் பாலாஜியிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ தெரிவிக்கவில்லை. செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று, திமுக தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார்.
English Summary
Senthilbalaji bail case ed case judgment postpone