செந்தில்பாலாஜியை விடுவதாக இல்லை! வெளியான தகவலுக்கே உச்சநீதிமன்றம் ஓடிய அமலாக்கத்துறை! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பாக செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர்.

இதனை அடுத்து மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு, இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியுள்ளது. நாளையும் இந்த வழக்கின் விசாரணை நடக்க உள்ளது. 

இந்த நிலையில், இந்த மூன்றாவது நீதிபதி அமர்வை அமைத்ததற்கு எதிராக, செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியது.

இதனை அடுத்து செந்தில் பாலாஜியை விவகாரத்தில் எந்த விதத்திலும் பின்னடைவை சந்திக்கக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் இது சம்பந்தமாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி விவகாரத்தை பொருத்தவரை மத்திய அரசா - மாநில அரசா என்று நேருக்கு நேர் மோதல் விவகாரமாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், அமலாக்கத்துறையின் இந்த கேவியட் மனு அதனை உறுதிப்படுத்தும் படி அமைந்துள்ளது.

நாங்கள் விடுவதாக இல்லை, ஒரு முடிவோடு தான் இருக்கிறோம் என்பதை தமிழக அரசுக்கும், திமுகவிற்கும் உணர்த்தும் படி அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji case ED Caveat Petition to Supreme Court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->