செந்தில்பாலாஜியால் சிக்கலில் சிக்கிய தமிழக அரசு! எய்ம்ஸ் மருத்துவ குழு.... சற்றுமுன் அதிரடியில் இறங்கிய அமலாக்கத்துறை!
Senthilbalaji heath issue ED next move
நேற்று அதிகாலை அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு வருக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோ சோதனையில், அவருக்கு இதயத்தின் ரத்தக் குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக கூறி, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் குழுவும் உறுதி செய்திருந்தது.
ஆனால், செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, செந்தில் பாலாஜி நேற்று வரை நன்றாக தான் இருந்தார், திடீரென உடல்நிலை சரியில்லை என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும், செந்தில் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் நாங்களே தர தயாராக இருக்கிறோம் என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் செய்திருந்தது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து தமிழக மருத்துவ குழுவின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்று கூறி, செந்தில் பாலாஜியின் உடல் நிலையை எய்ம்ஸ் மருத்துவக் குழு பரிசோதிக்க அனுமதிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்து உள்ளது.
அமலாக்கத் துறையின் இந்த மனு, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்பான விசாரணையுடன் விசாரணை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Senthilbalaji heath issue ED next move