செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு பின்னடைவு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Senthilbalaji wife case chennai hc judgement
சென்னை உயர்நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்ற திமுக தரப்பின் வாதம் நீதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும் என்ற அமலாக்க துறையின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Senthilbalaji wife case chennai hc judgement