காவல்துறை குறித்து விசிக அவதூறு பேச்சு..கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறல்..? ஆரணியில் தீவிர விசாரணை..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர போலீசாரை விசிக நிர்வாகிகள் அவதூறாக பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசிக மாவட்ட செயலாளர் உட்பட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் முக்கிய குற்றவாளியான விசிக மாவட்ட செயலாளர் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக மதுரையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் மற்றும் வழக்கறிஞர் பாப்பா மோகன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கி உள்ளனர்.

ஆரணி அடுத்த வடுகாசத்து கிராமத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் தொடர்ந்து 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கின் கைது நடவடிக்கையின் பொழுது மனித உரிமை மீறல் நடைபெற்றதா..? காவல்துறையினர் கண்ணியமாக நடந்து கொண்டார்களா..? என விசாரணை மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

serious investigation into vck police defamation speech case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->