கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் ஒன்றிணைத்து புதிய மதம் உருவாகும்; இந்திய இமாம் பரபரப்பு தகவல்..!
A new religion will be formed by uniting Christians Muslims and Jews Indian Imam sensational news
03 மதங்களை ஒன்றிணைத்து ஒரே மதமாக உலகில் உருவாக்கும் முயற்சி நடந்து வருவதாக அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகம்மது இலியாஸி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: உலகில் வாழும் முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரை கொண்ட ஒரு புதிய மதம் உருவாக்கப்படும். இதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், 03 மதங்களுக்கும் ஒரே ஆதாரம் ஒரே மூலம் தான். இறைவன் ஒருவனே.! என்பதும் முக்கிய கொள்கையாக இருக்கிறது. இந்த 03 மதத்தினரையும் இணைத்தால் மோதல்கள் குறையும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் தங்களுக்குள் சண்டை போடுகிறார்கள், அவர்கள் உறவினர்கள், சகோதரர்கள் என்றாலும், அவர்களை ஒன்றிணைக்க ஒரே வழி ஒரே மதம் தான் . வரவிருக்கும் ஆபிரகாமிய நம்பிக்கையின் மதம் உலகம் முழுவதும் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் என்றும், 03 மதங்களையும் இணைக்கும் குரல் ஒலிக்க துவங்கி விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த புதிய மதத்திற்கு நம்பிக்கை என்ற பெயர் வைக்கப்படும். இதற்கென ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலும் ஒரு ஆபிரகாம் நம்பிக்கை மையம் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வழிபாட்டு முறைகள் நிச்சயமாக வேறுபட்டவை; ஆனால் அனைத்தும் ஒன்றுதான் என்றும், உலகமெங்கும் மூன்று மதங்களையும் இணைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அது கண்டிப்பாக வரும் என்றும், அது எப்போது வரும் என்று தெரியவில்லை என்று இமாம் இலியாஸி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகம்மது இலியாஸி அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்றவர். இந்த விழா நாட்டின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் விதமாக அமையும் என கூறினார். இதனால் இவர் மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
A new religion will be formed by uniting Christians Muslims and Jews Indian Imam sensational news