ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் - 7 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க.வினர் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதை கண்டிக்கும் வகையில் பா.ஜ.க இளைஞரணி செயற்குழு உறுப்பினர் வினோத்குமார் தலைமையில் சிவ.பாஸ்கர், இன்பராஜ், மீனாட்சி ஸ்ரீதர், வேதகிரி, ராஜா மற்றும் சிவசங்கரன் உள்பட பா.ஜ.க.வினர் ஆர்.எஸ்.பாரதியின் வீட்டை முற்றுகையிட வந்தனர். 

இதையறிந்த திமுகவினர் முன்னதாகவே ஆர்.எஸ்.பாரதி வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். இதன் காரணமாக, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். இதனால், பா.ஜ.க.வினர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது, போலீசார் பா.ஜ.க.வினர் ஏழு பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven bjp workers arrested for tried lay seigh to rs barathi house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->