ரூ.7.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.!
Seven crores drugs seized in chennai airport
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம், போதைப்பொருள், அறிய வகை உயிரினங்கள் உள்ளிட்டவற்றை கடத்தி வருகின்றனர். அந்த வகையில், தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் பாங்காக்கில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த பயணி ஒருவரின் உடைமையை மோப்பம் பிடித்த மோப்பநாய் சத்தம் எழுப்பியது.
உடனே அதிகாரிகள் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் உயர்ரக கஞ்சா போதைப்பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்து சுமார் ரூ.7.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Seven crores drugs seized in chennai airport