கன்னியாகுமரியில் கடும் வெள்ளப்பெருக்கு!...பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ள வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகபட்சமாக தக்கலையில் 119 மி.மீ. மழையும், திற்பரப்பில் 64.8 மி.மீ., ஆனைக்கிடங்கில் 66.4 மி.மீ., அடையாமடையில் 61.4 மி.மீ., நாகா்கோவிலில் 53.2 மி.மீ., கோழிப்போா்விளையில் 50.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு உள்வரும் ஆறுகளான கோதையாறு, கல்லாறு, கிளவியாறு, மயிலாறு, சாத்தையாறு, மோதிரமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள பழங்குடி குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42.42 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 717 கனஅடியாக நேற்று இருந்தது, இதே போல், களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் குழித்துறை ஆற்றில் கரைபுரண்டோடியது. தொடர்ந்து அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து, தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Severe flooding in kanyakumari public works officials take serious action


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->