#தமிழகம் || மதுபோதையில் ரவுடியை வெட்டி சாய்த்த கும்பல்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ள தொட்டிகலை பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் நண்பர்களுடன் சிறுகடல் மதுபானக்கடை அருகே மது அருந்தி கொண்டிருந்தார். 

அப்போது தின்பண்டம் வாங்குவது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள், வேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். 

இதனால் படுகாயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்கு, இரண்டு கொலை முயற்சி வழக்கு, வழிப்பறி என‌ 7 வழக்குகள் உள்ளன.

இந்த கொலை சம்பவம் குறித்து பூந்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sevvaipet rowdy murder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->