சிவகங்கை மாவட்டம்! மின்கம்பத்தில் ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 7 மாணவிகள் காயம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் மின் கம்பத்தில் ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 7 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் புழுதிபட்டி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு, ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது கரிசல்பட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ வேகமாக சென்று மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 7 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த மாணவிகளை அங்கிருந்த பொதுமக்கள் துவரங்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அப்பகுதியில் போதிய பேருந்து வசதியில்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், ஷேர் ஆட்டோ டூவீலரில் பயணிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Share auto accident seven students injured


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->