சென்னையில் அதிர்ச்சி!...ரூ.110 கோடி மதிப்பிலான போதை பவுடர் கடத்தல் முயற்சி!...2 பேர் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு  சரக்கு கப்பல் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.  இந்த நிலையில், இந்த சரக்கு கப்பலில் அதிக அளவிலான போதைப்பொருட்கள் சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளின் தனிப்படையினர் சென்னை துறைமுகத்திற்கு விரைந்து அந்த சரக்கு கப்பலை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

கப்பலில் இருந்த மூட்டைகளை தனித்தனியாக பரிசோதித்ததில், மொத்தம் 450 மூட்டைகளில் 37 'குவார்ட்ஸ்' தூள் மூட்டைகளின் அடிப்பகுதியில், தலா 3 கிலோ 'சூடோ எபிட்ரின்' கொண்ட 37 பாக்கெட்டுகள் ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 112 கிலோ எடை கொண்ட 'சூடோ எபிட்ரின்' போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில்  2 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து கடத்தல்காரர்கள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் ரூ.3.9 லட்சம் ரொக்கம் பணத்தை தனிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock in chennai an attempt to smuggle drug powder worth Rs 110 crore 2 people arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->