குலசேகரன்பட்டினத்தில் அதிர்ச்சி சம்பவம்!...பக்தர்கள் கம்பாலும், கைகளாலும் தாக்கு!
Shocking incident in kulasekaranpattinam devotees attacked with sticks and hands
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திரு விழாவின் ஒரு பகுதியாக கடற்கரையில் பக்தர்கள் புனித நீர் எடுக்க சென்ற போதுஒருவரை ஒருவர் கம்பாலும், கைகளாலும் தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், அன்றைய தினமே பக்தர்கள் காப்பு அணிந்து, விரதம் இருக்க தொடங்கினர்.
தொடர்ந்து கோவில் கடற்கரையில் பக்தர்கள் புனித நீர் எடுக்க சென்ற போது, இரு தரப்பு பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், பின்னர் இது கைகலப்பாகி, ஒருவரை ஒருவர் கம்பாலும், கைகளாலும் தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த சக பக்தர்கள் அவர்களிடையே கூச்சலிட்டு உடநாடியாக, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். மேலும் கடற்கரையில் பக்தர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், கோவில் மற்றும் கடற்கரை பகுதிகளில் போலீசார் கண்காணித்து வருவதோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Shocking incident in kulasekaranpattinam devotees attacked with sticks and hands