இந்து கடைகளில் மட்டும் பொருட்களை வாங்குங்கள்! நோட்டீஸ் வழங்கிய இந்து முன்னணி பிரமுகர் சிறையில் கம்பி எண்ணுகிறார்! - Seithipunal
Seithipunal


போலீசை தடுக்க முயன்ற நபரும் சிறைக்குச் சென்றார்!

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் இந்து கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்றும், இஸ்லாமிய மற்றும் கிருத்துவ கடைகளை புறக்கணிக்க வேண்டும் எனவும், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் போஸ்டர்களை ஒட்டியும், துண்டு பிரசுரங்களை கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் சக்தி  வியாபாரிகள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்து வந்துள்ளார். அதில் நலிவுற்ற நிலையிலிருக்கும் இந்து வியாபாரிகளை காப்பாற்ற வரும் தீபாவளி பண்டிகைக்கு பொருட்களை இந்து கடைகளிலேயே வாங்குங்கள் என அச்சிடப்பட்டிருந்தது. அதை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனை அறிந்த வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்துள்ளனர். சக்தியை கைது செய்யப்பட்டுள்ள குறித்து அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வெள்ளியணை காவல் நிலையத்தில் ஒன்று கூடி காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சக்தியை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அழைத்து செல்ல முயன்ற போது அங்கு இருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த வெற்றி என்பவர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதால் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் கரூர் மாவட்டத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கோவையில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகரால் தமிழக முழுவதும் ஆங்காங்கே சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தற்பொழுது நோட்டீஸ் வழங்கப்பட்டதாக இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shop only at Hindu stores Hindu munnani member arrested in karur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->