சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த தினம் ..அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!
Singaravelars birthday Political party leaders pay their respects!
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம். சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமிகாந்தன், பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல சிங்காரவேலர் பிறந்த நாளையொட்டி,எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில்
திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து சிங்காரவேலர் பிறந்த நாளையொட்டிகாங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில்முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர்.

English Summary
Singaravelars birthday Political party leaders pay their respects!