#BigBreaking: பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்..!! - Seithipunal
Seithipunal


இந்திய திரை உலகின் பிரபல பின்னாடி பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம். சென்னையில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலூரை சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த 78 வயதாகும் வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 19 மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 1974ம் ஆண்டு தீர்க்க சுமங்கலி என்ற திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயக்கம் என்ற பாடலை முதன் முதலில் பாடி தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

இவர் பின்னணி பாடகிக்கான பத்மபூஷன், பத்மவிபூஷன், தேசிய விருதுகள் உள்ளிட்டவற்றை விருதுகளை பெற்றுள்ளார். 

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். 

இது குறித்த தகவல் அறிந்த நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

singer Vani Jayaram passed away in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->