மொட்டைமாடியில் மதுகுடித்த நண்பர்கள்.. நள்ளிரவில் அலறித் துடித்து நேர்ந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்திலுள்ள கருப்பர் கோவில்பட்டி பகுதியில் மதியரசன் மற்றும் வெள்ளை கண்ணு என்ற இரண்டு இளைஞர்கள் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் உறவினர்கள். இருவருமே வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், வெள்ளை கண்ணுக்கு திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் இருந்தன. 

மனைவியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஓராண்டு காலமாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். வெள்ளை கண்ணு தனது மூத்த பெண் குழந்தையை எடுத்துவந்து வளர்த்து வந்துள்ளார். மதியரசனுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.

இருவரும் வெளிநாட்டிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர். எந்த வேலைக்கும் செல்லாமல் இருவரும் வீட்டில் இருந்து கொண்டு வெளிநாட்டில் இருந்து எடுத்து வந்த பணத்தை வைத்து அன்றாடம் குடித்துக் கொண்டே இருந்தனர். இதை அவர்களுடைய பெற்றோர்கள் கண்டித்தனர். 

இத்தகைய சூழலில், இருவரும் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு இரண்டு மணி அளவில் வலி தாங்காமல் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakangai 2 Friends Drinks and died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->