#BREAKING:: "வரும் ஆனா வராது".. உலக வங்கி ஆலோசனைப்படியே "தனியார் பேருந்துகள்".. அமைச்சர் சொன்ன புது விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "சென்னை போக்குவரத்து கழகத்தின் மூலம் தனியார் பேருந்துகளை இயக்க போவதாக தேவையற்ற பதற்றம் நேற்று முதல் தமிழகத்தில் நிலவி வருகிறது. தற்பொழுது விடப்பட்டிருக்கும் டெண்டர் என்பது தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் என்ற செய்தி பரவியுள்ளது. அதனை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.

ஆனால் விடப்பட்டிருக்கும் டெண்டர் என்பது உலக வங்கி வழங்கியுள்ள கருத்துக்கள் அடிப்படையில் அது குறித்து ஆய்வு மேற்கொண்டு சாதக பாதகங்களை ஆராய்வதற்கு ஆலோசனைக் குழுவிற்கான டெண்டர் தான் விடப்பட்டுள்ளது.

உலக வங்கி வழங்கியுள்ள ஆலோசனையில் சென்னை உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைப்பு மூலமாக சென்னை மாநகர் ஒப்பந்தம் அடிப்படையில் பல்வேறு கருத்துறைகளை தொகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கிராஸ் காஸ்ட் முறையில் சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் 500 பேருந்துகளை செயல்படுத்தலாம் எனவும், அடுத்த ஆண்டு கூடுதலாக 500 பேருந்துகளை செயல்படுத்தலாம் என உலக வங்கி கருத்துக்களை வழங்கியுள்ளது.

அந்த கருத்துக்கள் அடிப்படையில் ஆலோசகர்கள் குழு நியமிப்பதற்கான ஒப்பந்தம் தான் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் என்பது ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்காக மட்டும்தான். 

அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்தான சாதக பாதகங்களை ஆய்வு செய்து அவர்கள் அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவெடுத்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

ஏதோ நாளையே தனியார் பேருந்துகள் இயக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னை மாநகரம் போன்று பல மாநகரங்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. அந்த தனியார் பேருந்துகள் அவர்களுக்கு சொந்தமான வழிதடத்தில் அவர்களின் சொந்தப் பேருந்துகளை இயக்குகின்றனர். 

ஆனால் உலக வங்கி வழங்கியுள்ள இந்த கருத்து என்பது அரசு பேருந்து வழிதடத்தில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்குவது என்பதுதான். எனவே  அரசு பேருந்துகள் தனியார் மையமாகுவது என்ற பேச்சுக்கு இடமில்லை. ஜிசிசி முறை என்பது ஆய்வு செய்யப்பட்ட பிறகு அதன் மீது அரசு எடுக்கும் நடவடிக்கை அடிப்படையில் தான் அடுத்த கட்டம் குறித்து அரசு முடிவெடுக்கும். 

ஏற்கனவே அரசு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் ஒருபோதும் நிறுத்தப்படாது. சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கூடுதல் பேருந்து வசதிகள் தேவை என்ற அடிப்படையில் அதை சரி செய்வதற்கு உலக வங்கி இத்தகைய கருத்துகளை முன் வைத்துள்ளது. எனவே கூடுதலாக பேருந்துகள் தான் எந்த வழிதடத்தில் தேவை இருக்கிறதோ, அந்த வழித்தடம் கண்டறியப்பட்டு பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது உலக வங்கியின் கருத்து. 

எனவே தற்போது இயக்கப்படுகின்ற பேருந்துகள் நிறுத்தப்படும் என்பதோ, அதில் பணி செய்யும் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதோ தேவையற்ற வதந்தியாகும். மேலும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இலவச பேருந்து திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivasankar explained private buses operates in Chennai as per world bank advice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->