மதுரை || கடைக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை - விசாரணையில் சிக்கிய சிறுவர்கள்.!
six boys arrested for harassment case in madurai
மதுரை மாவட்டத்தில், 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், கடைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் அவரைத் தேடிச்சென்றுள்ளனர். அப்போது சிறுமி எதிரில் அழுதபடி வந்தார்.
இதைப்பார்த்து பதறிப்போன பெற்றோர் சிறுமியிடம் அழுவது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு சிறுமி, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து மதுரை நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில், பதினான்கு வயது சிறுமிக்கு, அவருடன் பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் உள்பட ஆறு சிறுவர்கள், தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six boys arrested for harassment case in madurai