தமிழகத்தில் புதிதாக 600 புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறை நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிதாக 600 புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறை நடவடிக்கை.!!

கடந்த மார்ச் 20 ஆம் தேதி தமிழக சட்டசபையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது போக்குவரத்து தொடர்பான திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்திருந்தார். 

அந்த அறிவிப்பில், தரமான வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக, பேருந்துகளை தொடர்ந்து புதுப்பிப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும்,  500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும், இந்த வரவு செலவு திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் 600 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் 150 முழுமையான தாழ்த்தள பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. 

பட்ஜெட்டில் அறிவிப்பில் ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று வெளியிடப்பட்டிருந்த நிலையில்,  முதற்கட்டமாக 600 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six hundrad new bus buy in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->