பெற்ற பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய கொடூர தாய் - சென்னையில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பெண் ஒருவர் கணவரின் இறப்புக்கு பிறகு குடும்பத்திற்கு சரியான வருமானம் இல்லாததால், மகளின் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். இதற்கிடையே, அந்தப் பெண் கடந்த 2021ஆம் ஆண்டு அவசரமாகப் பணம் தேவைப்பட்டபோது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் புரோக்கராக செயல்பட்டு வந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.40,000 கடன் வாங்கியிருக்கிறார். 

இந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையில், அந்தப் பெண் பணத்திற்கு பதிலாக தன் மகளை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்து பாலியல் தொழிலில் தள்ளிவிட்டார்.
அவரும் அந்த சிறுமியை 2021 – 2023ஆம் ஆண்டு வரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். 

இதனால் அந்தச் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அங்கு இருக்க முடியாமல் வீட்டிற்குத் தப்பித்து வந்துள்ளார். ஆனால், அந்த சிறுமியின் தாய் மீண்டும் அவரை முத்துலட்சுமியிடமே அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் முத்துலட்சுமியிடம் இருந்து தப்பித்துச் சென்ற சிறுமி, தனக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரின் துணையுடன் மணலி பகுதியில் 8 மாதமாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வாரம் சிறுமியின் தாய் அவரைத் தொடர்பு கொண்டு மீண்டும் முத்துலட்சுமியிடம் செல்லுமாறு திட்டியுள்ளார். ஆனால், சிறுமி, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய், புரோக்கர் முத்துலட்சுமி, அவரது கணவர் நிஷாந்த், மகேஸ்வரன், கிஷோர், அஜித் குமார் உள்ளிட்ட ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples arrested in chennai for adultery case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->