மின்சார ரயிலில் இருந்து வந்த புகை - பயணிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு.!
smoke come from electric train in gindy
மின்சார ரயிலில் இருந்து வந்த புகை - பயணிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு.!
சென்னையில் மின்சார ரெயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று கிண்டி அருகே வந்துக் கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் அடிபக்கத்திலிருந்து திடீரென புகை வந்துள்ளது.
இதைப்பார்த்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறங்குமாறுத் தெரிவித்தார். பின்னர் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்குத் தகவல் அளித்தார்.
அந்தத் தகவலின் படி ரயில்வே போலீசார் ஊழியர்களுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், ரயிலில் பிரேக் பாய்ண்டில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஊழியர்கள் பழுதை சரிசெய்த பிறகு ரயில் அங்கிருந்து பதினைந்து நிமிடங்கள் தாமதாமாகப் புறப்பட்டுச் சென்றது. ரயிலில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
smoke come from electric train in gindy