விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நபர் பிறந்த தினம்.!!
somasundara bharathiar birthday 2021
சோமசுந்தர பாரதியார் :
விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் 1879ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன்.
இவர் ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். 1905ஆம் ஆண்டு முதல் 1933ஆம் ஆண்டு வரை இவர் வழக்கறிஞராக பணியாற்றினார்.

தமிழ் இலக்கண இலக்கியங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது தமிழ் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டு தமிழ்ப்புலவர் மன்றம் 'நாவலர்" என்ற பட்டத்தை வழங்கியது.
தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 1959ஆம் ஆண்டு மறைந்தார்.
தேசிக விநாயகம் பிள்ளை :
தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார்.
இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை 'கவிமணி" என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார்.

மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
இணையற்ற தமிழ் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
somasundara bharathiar birthday 2021