கொடூரம்! தாயை தீட்டிய தந்தை! ஆத்திரத்தில் தந்தையை போட்டு தள்ளிய மகன் கைது! - Seithipunal
Seithipunal


தாயை தரகுறைவாக பேசியதால் உருட்டு கட்டையால் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் வீரய்யா. இவர் மணலிபுது நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகம்மாள். இவர்கள் இருவருக்கும் மூன்று மகள்களும் ரோஜேஷ் என்ற மகனும் நூலக கூறப்படுகிறது.

மூன்று மகள்களும் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருவகின்றனர். அவரது மகன் ரோஜேஷ் அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நாகம்மாள் அவரது மகன் ரோஜேஷ் ஆகிய  இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மது போதையில் வீட்டுக்கு வந்த வீரய்யா அட்டகாசம் செய்து உள்ளார்.

இதனால் அதிரமடைந்த நாகம்மாள் இது குறித்த வீரய்யாவிடம் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீரய்யா மனைவியை தரகுறைவாக ஆபாசமான வார்த்தைகளை கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ரோஜேஷ் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தாயை தரகுறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்த ரோஜேஷ் அருகில் இருந்த உருட்டு கட்டை எடுத்து வீரய்யா பின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதனால் மயங்கி விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்த வீரய்யா கண்டு அதிர்ச்சி அடைந்த நாகம்மாள் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து  வீரய்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் வீரய்யா பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தைக்கேட்டு கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிதாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து  அங்கு வந்த போலீசார் வீரய்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ரோஜேஷை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ரோஜேஷை நள்ளிரவில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son arrested for beating his father to death with a rolling stick


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->