தென் மாவட்ட வெள்ள நிவாரணப் பணி: முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


அரசு நிவாரண உதவிகள் பொதுமக்களை 100 சதவீதம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

அதிக கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய நிலவரத்திற்கு ஏற்ப முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு நிவாரண உதவிகள் பொதுமக்களை 100 சதவீதம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South district flood relief CM Stalin order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->