கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டுவதை தடுக்க தனிப்படை..!! தென்மண்டல ஐ.ஜி ஆஸ்ரா கர்க் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் இறைச்சி கழிவு, கட்டிடக்கழிவு, மருத்துவ கழிவுகளை திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புடன் நீர்நிலைகளும் மாசடைகிறது. இதனை அடுத்து தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து தமிழக மற்றும் கேரளாவில் அமைந்துள்ள 17 மாவட்ட நிர்வாகங்கள் கழிவு மேலாண்மை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இதன் எதிரொலியாக தமிழகத்தில் கொட்டப்படும் கேரள கழிவுகளை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்க தென் மண்டல ஐ.ஜி ஆஸ்ரா கர்க் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது "கேரளா கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க தென் மாவட்ட கனரக வாகன உரிமையாளர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இரண்டு வழக்குகளும் ஆலங்குளத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கழிவுகளை கொட்ட வந்த 45 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார். மேலும் தென்காசி மாவட்ட காவல்துறையினர் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த புனலூர் கிருஷ்ணகுமார் மற்றும் திருநெல்வேலி இடைத்தரகர் கருப்பசாமி ஆகியவரை கைது செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். காவல்துறையின் இத்தகைய நடைமுறைக்கு பிறகு கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டுவது தடுக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Zone IG orders Spl force to prevent dumping Kerala waste


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->